ரூ.15 ஆயிரம் லஞ்சம்; பேரூராட்சி அலுவலர் கைது..!
Jul 8, 2026, 07:20 IST1783475410000
விழுப்புரம் அருகே உள்ள திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியில் மருத்துவமனை கட்டுமானத்திற்கு அனுமதி பெற காவியவேந்தன் என்பவர் விண்ணப்பித்து இருந்தார். அப்போது இளநிலை உதவியாளர் பாலமுருகன் ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த காவியவேந்தன் லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் அளித்தார். அவர்களின் அறிவுறுத்தலின்படி இன்று (ஜூலை 07) காலை ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை இளநிலை உதவியாளரிடம் வழங்க லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அறிவுறுத்தினர். இளநிலை உதவியாளர் பாலமுருகன் இடம் காவியவேந்தன் பணத்தை வழங்கும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் பாலமுருகனை கையும், களவுமாக கைது செய்தனர்.

