ரூ 1,383.90 கோடி காணிக்கை! நிரம்பி வழிந்த திருப்பதி உண்டியல்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2025 ஆம் ஆண்டில் சாமி தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் ரூ.1,383.90 கோடி காணிக்கையாக செலுத்தினர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்த பக்தர்கள் நாளுக்கு நாள் உண்டியலில் செலுத்தும் காணிக்கை அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. அதன்படி 2024 ஆம் ஆண்டில் 2.55 கோடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்து உண்டியலில் ரூ 1,365 கோடி காணிக்கையாக செலுத்தினர். இதே கடந்த 2025 ஆம் ஆண்டில் 2.61 கோடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்து உண்டியலில் ரூ. 1383.90 கோடி காணிக்கையாக செலுத்தினர். இதேபோன்று 2024 ஆண்டு 99 லட்சம் பக்தர்கள் மொட்டையடித்து தலைமுடி காணிக்கையாக செலுத்திய நிலையில் 2025 ஆம் ஆண்டில் 88.83 லட்சம் பக்தர்கள் தலைமுடி காணிக்கையாக செலுத்தினர். 2024 ஆண்டு 6.30 கோடி பக்தர்களுக்கு அன்னப்பிராசதம் வழங்கப்பட்ட நிலையில் 2025 ஆம் ஆண்டில் 7.42 கோடி பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டில் 12.14 கோடி லட்டுகள் விற்கப்பட்ட நிலையில் 2025 ஆம் ஆண்டில் 13.51 கோடி லட்டுகள் விற்கப்பட்டதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.


