மனைவி பெயரில் 13 கோடி.. உதயநிதி பெயரில் 20 கோடி..! - வைரலாகும் அமைச்சர் உதயநிதியின் சொத்துப் பட்டியல்..!

 
1

இரண்டாவது முறையாக உதயநிதி ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி, உதயநிதி பெயரில் அசையும் சொத்துகள் ரூ.12.92 கோடி மதிப்பில் உள்ளன. அசையா சொத்துகள் ரூ.7.72 கோடி மதிப்பில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.  

உதயநிதி திருவள்ளூரில் விவசாய நிலம் ஒன்றை  வைத்துள்ளார்.  மேலும், வேளச்சேரியில் வேளாண்மை அல்லது பிற இடங்களை வைத்துள்ளார். ராயப்பேட்டையில் அடுக்குமாடி குடியிருப்புகளும் இருப்பாக வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.  மேலும், உதயநிதி கையில் ரூ.50,000 ரொக்கமாக வைத்துள்ளார்.   

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் ரூ.14.56 லட்சமும், ஆக்சிஸ் வங்கியில் ரூ.8.44 லட்சமும், தேர்தல் செலவுக்காக தொடங்கப்பட்ட வங்கிக் கணக்கில் ரூ.10 லட்சமும் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், உதயநிதி ஸ்டாலினிடம் ரூ.1 கோடி மதிப்பில் டிஃபென்டர் கார், ரூ.23 லட்சம் மதிப்பில் இன்னோவா காரும் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.   தங்கம், வெள்ளி, வைர நகைகள் எதுவும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். மனைவி கிருத்திகா பெயரில் ரூ.13.25 கோடி மதிப்பில் அசையும் சொத்துகளும், அசையா சொத்துகள் எதுவுமில்லை என தெரிவித்துள்ளார். கிருத்திகாவிடம் ரூ.75,000 ரொக்கம் கையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். கிருத்திகாவிடம் கார், பைக் என வாகனங்கள் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார்.   

மேலும், ரூ.1,87,82,720 மதிப்பில் 1600 கிராம் தங்க  நகைகள் இருப்பதாகவும் வேட்பு மனுவில் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இதில், மகள் இன்பன் உதயநிதி பெயரை உதயநிதி குறிப்பிடவில்லை. மகள் தன்மயா உதயநிதி பெயரை குறிப்பிட்ட அவர், இன்பன் உதயநிதி பெயரை குறிப்பிடவில்லை. இன்பன் உதயநிதி பெயரை குறிப்பிடாமல் இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது.   

இருப்பினும், இன்பன் உதயநிதி பெயரில் ரெட் ஜெயிட் இருக்கிறது. ஆனால், கொடுக்கல், வாங்கலில் உதயநிதியை சார்ந்திருக்காமல் இருந்தாலும், உதயநிதி அவரது மகன் இன்பன் உதயநிதி பெயரை குறிப்பிடாமல் இருந்திருக்கலாம் என வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.