"8 மாதங்களில் ₹125 கோடி!" – பிசினஸில் வேற லெவல் மாஸ் காட்டும் நடிகை சமந்தா!
தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தமிழ், தெலுங்கு மொழிகளில் பல வெற்றிப் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ள இவர், தற்போது சினிமாவைத் தாண்டி தொழில் துறையிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
கடந்த 2025-ம் ஆண்டு பாலிவுட் இயக்குநர் ராஜ் நிடிமோருவை திருமணம் செய்துகொண்ட சமந்தா, தற்போது கர்ப்பமாக இருப்பதால் நடிப்பில் இருந்து தற்காலிக ஓய்வு எடுத்துள்ளார். குழந்தை பிறக்கும் வரை திரைப்படங்களில் நடிப்பதை தவிர்க்க முடிவு செய்துள்ள அவர், அதன்பிறகு மீண்டும் திரையுலகில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நடிப்பில் மட்டுமின்றி தொழில் தொடங்குவதிலும் ஆர்வம் கொண்ட சமந்தா, சமீபத்தில் தனது நண்பர்களுடன் இணைந்து வாசனை திரவியங்கள் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனத்தை தொடங்கினார். இயற்கையான மூலப்பொருட்களை பயன்படுத்தி வாசனை திரவியங்களை தயாரிப்பது இந்த நிறுவனத்தின் முக்கிய சிறப்பம்சமாகும்.
திரைப்படங்களில் நடிப்பதுடன், தொழில் துறையிலும் தனக்கென ஓர் இடத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் சமந்தா இந்த முயற்சியில் இறங்கியுள்ளார். இதற்கிடையே, சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றிலும் நடுவராகப் பணியாற்றி வருகிறார். மேலும், தனது சமூக வலைதளப் பக்கத்தில் அன்றாட வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட அனுபவங்கள் தொடர்பான வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்.
இந்த நிலையில், சமந்தா தொடங்கிய வாசனை திரவிய நிறுவனத்தின் வளர்ச்சி குறித்த தகவல் தற்போது கவனம் பெற்றுள்ளது. நிறுவனம் தொடங்கப்பட்டு வெறும் 8 மாதங்களிலேயே ரூ.125 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறுகிய காலத்திலேயே இவ்வளவு பெரிய வருவாயை ஈட்டியிருப்பது தொழில் துறையில் சமந்தாவுக்கு கிடைத்துள்ள முக்கியமான வெற்றியாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே நடிகையாக தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள சமந்தா, தற்போது தொழில் அதிபராகவும் கவனம் ஈர்த்து வருகிறார்.

