மதுரையில் ரூ.1000 கோடி மோசடி… திணறும் போலீஸ்… சதுரங்க வேட்டையை மிஞ்சிய சம்பவம்
மதுரை, திண்டுக்கல் மாவட்டத்தில் பணத்தை இரட்டிப்பாக்குவதாக சுமார் ரூ. 1000 கோடிக்கு மோசடி நடந்திருக்கலாம் எனத் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர், கீழவளவு, மேலவளவு, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், FQL Exchange மற்றும் VG Investment போலி செயலிகள் மூலம் முதலீடு செய்யும் பணத்திற்கு இரண்டே மாதங்களில் இரட்டிப்பு லாபம் தருவதாகக் கூறி மாபெரும் மோசடி அரங்கேறியுள்ளது. பணத்தை இரட்டிப்பாக்குவதாக சுமார் ரூ. 1000 கோடிக்கு மோசடி நடந்திருக்கலாம் எனத் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக வேலூர், நத்தம் சுற்றுவட்டார பகுதிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஏமாற்றப்பட்டிருப்பது அம்பலமாகியுள்ளது. பண இரட்டிப்புக்கு ஆசைப்பட்டு தனி நபர்கள் ரூ.50,000 முதல் ரூ.20 லட்சம் வரை முதலீடு செய்து ஏமாந்துள்ளனர்.
ஒரே குடும்பத்தில் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் பணம் முதலீடு செய்து ஏமாந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோசடி அம்பலமான பிறகே ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஏமாந்தது தெரியவந்தது. மூன்றாவது நாளாக போலீசார் புகார்களைப் பெற்றுவரும் நிலையில், 3 முகவர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை நத்தம் காசம்பட்டியை சேர்ந்த 2 முகவர்கள் மற்றும் மேலூர் பகுதியில் உறவினர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். மோசடிக்கு மூளையாக செயல்பட்டவர்களை கண்டறிய போலீஸ் தீவிரம் காட்டிவருகிறது. ஒரே நாளில் 22,000 பேர் புகார் மனுக்களை அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுடததியுள்ளடு.

