பாட்டிலுக்கு 10 ரூபாய்... சட்டப்பேரவையில் நடந்த காரசார விவாதம்..!
10 ரூபாய் விவகாரத்தில் அதை முழுக்க முழுக்க வாங்க சொன்னதே தி.மு.க தான்..! அப்போ நாங்க வாங்கினோம்னு சொன்னிங்க.. நீங்க என்ன வாங்காமலா இருக்கீங்க..? நீங்கள் செய்தால் அது நியாயம்.. நாங்கள் செய்தால் அது ஊழலா..? டாஸ்மாக் 10 ரூபாய் விவகாரத்தில் அமைச்சர் விக்னேஷ் மற்றும் கே.என்.நேரு இடையே நடந்த காரசாரமான வாக்குவாதம்..
"ஒரு கடையை நடத்த, மாதம் குறைந்தது ரூ.10 ஆயிரம் தேவைப்படுகிறது. அவர்கள் வாங்கும் சம்பளத்தில் எப்படி அதை செய்ய முடியும்? அவர்களை ரூ.10 கூடுதலாக வாங்கத் தூண்டியது நீங்கள்தான்(திமுக)"
அமைச்சர் விக்னேஷ்
"பாட்டிலுக்கு 10 ரூபாய் என்று கூறினீர்கள். 10 ரூபாய் என்ன செலவு என நீங்களே சொல்லி உள்ளீர்கள். அப்படி என்றால் 10 ரூபாய் நாங்கள் வாங்கவில்லை. அவர்கள்தான் வாங்கி உள்ளார்கள்"
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு
"10 ரூபாய் வாங்க சொன்னதே அதிகாரிகளும், அப்போதைய திமுக அமைச்சர்கள் என தொழிலாளர்கள் சொல்கிறார்கள்"
அமைச்சர் விக்னேஷ்
"1 ரூபாய் 2 ரூபாய் கூடுதலாக வாங்கிய நேரத்தில் பிரச்சனை இல்லை. 10 ரூபாய் வந்த நேரத்தில் தான் பிரச்சனை. மொத்தமாக 5 ஆயிரம் கோடி ரூபாய் எங்கு சென்றது என்பதை சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்."
பாட்டிலுக்கு 10 ரூபாய்... காரசாரமாக நடந்த விவாதம்!
— PttvOnlinenews (@PttvNewsX) August 31, 2026
”உங்க காலத்துல சொன்னா Justification.. எங்க காலத்துல சொன்னா அது ஊழலா? இப்போ 20 ரூபாய் ஆக்கிட்டீங்க” - முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு
”அண்ணனுக்கு 10 ரூபாய் போகும்னு நினைக்கிறேன், 20 ரூபாய்னு சொல்லிட்டே இருக்காரு” - அமைச்சர்… pic.twitter.com/5eQ4IGvRkC