தகவல் தந்தால் ரூ.10 லட்சம் வெகுமதி..!

 
Q

பெங்களூருவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்புடைய குற்றவாளிகளின் புகைப்படத்தை என்.ஐ.ஏ வெளியிட்டுள்ளது.

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்படும் குற்றவாளிகள் குறித்து தகவல் அளித்தால் ரூ.10 லட்சம் வெகுமதியாக வழங்கப்படுமென என்.ஐ.ஏ அறிவித்துள்ளது.

மார்ச் 1ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்பு வழக்கை என்.ஐ.ஏ தீவிரமாக விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் தேடப்படும் குற்றவாளிகளின் தெளிவான புகைப்படங்களை வெளியிட்டுள்ள என்.ஐ.ஏ, தகவல் தருவோரின் விவரங்கள் ரகசியம் காக்கப்படுமென தெரிவித்துள்ளது.