ரயில் நிலைய கவுண்ட்டரில் கொள்ளை : ரயில்வே ஊழியர் கைது!!

 
ttn

சென்னை திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் பணம் கொள்ளை போனதாக நாடகமாடிய ரயில்வே ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார் தனது மனைவியுடன் சேர்ந்து டிக்கெட் கவுண்ட்டர் ஊழியர் டிக்காராம்  கொள்ளை நாடகமாடியது அம்பலமாகியுள்ளது.

An-employee-was-arrested-for-robbing-Rs-1-32-lakh-at-the-Thiruvanmiyur-railway-station-counter-in-Chennai

திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் தன்னைக் கட்டிப் போட்டுவிட்டு பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டதாக ரயில்வே  ஊழியர் டிக்காராம் போலீசில் புகார் அளித்துள்ளார்.   ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமராக்கள் இல்லாத நிலையில் அருகே உள்ள சிசிடிவி கேமராக்களை ரயில்வே போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். இதில் அதிகாலை நேரத்தில் ரயில் நிலையத்திற்கு  பெண் ஒருவர் வந்தது பதிவாங்கியிருந்தது. விசாரணையில் அது  ஊழியர் டிக்காராம்,  மனைவி மீனா என்பது தெரியவந்தது . 

image

விசாரணையில் அதிகாலையில் மனைவியை வரவழைத்து தன்னை கட்டிப் போட வைத்து,  மனைவியுடன் சேர்ந்து ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 500 ரூபாயை கொள்ளையடித்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இதையடுத்து  டிக்கெட் கவுண்ட்டர் ஊழியர் டிக்காராம்   மற்றும் அவரது மனைவியை கைது செய்த போலீசார் ரூ.1.32 லட்சத்தை  பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் சக ரயில்வே ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.