ரவுடி கருக்கா வினோத்துக்கு நவ.15 வரை காவல்

 
கருக்கா வினோத்

ஆளுநர் மாளிகை சாலையில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ரவுடி கருக்கா வினோத்துக்கு நவம்பர் 15 வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது.

Image

கடந்த மாதம் 22 ஆம் தேதி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய விவகாரத்தில் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமினில் வெளிய வந்ததும் ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசிய விவகாரத்தில் கருக்கா வினோத் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் மூன்று நாள் கிண்டி போலீசார் காவலில் எடுத்து விசாரித்த நிலையில் இன்று மீண்டும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். இந்த நிலையில் வருகிற 15 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் கருக்கா வினோத்தை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். முன்னதாக சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு வந்த கருக்கா வினோத் ஆளுநருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதுடன் குடியரசு தலைவர் நீட் தேர்வை ரத்து செய்வார் என கோஷம் எழுப்பிய படி காவல் வாகனத்தில் ஏறினார். இதனைத் தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் மீண்டும் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

முன்னதாக மூன்று நாள் காவலில் எடுத்து விசாரிக்கையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் 10 ஆண்டுகள் சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளுக்காகவும் பெட்ரோல் குண்டு வீசியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் செய்தித்தாள்களில் படிக்கும் போது நீட் தற்கொலைகள் தனக்கு பாதிப்பு ஏற்படுத்தியதாகவும் எதிர்காலத்தில் நீட் தேர்வினால் தனது மகன் பாதிக்கப்படலாம் என்று பெட்ரோல் குண்டு வீசியதாக கருக்கா வினோத் வாக்குமூலம் அளித்ததாகவும் காவல்துறை தரப்பில் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது