எண்ணூரில் கடல் சீற்றம்- சாலைக்கு வந்த கடல் நீரால் போக்குவரத்து நிறுத்தம்!
கடல் சீற்றம் காரணமாக எண்ணூர் கடற்கரைச் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

Due to Cyclone Arnab Storm Surge effect in Ennore North Chennai #CycloneArnab pic.twitter.com/kQqWJuLx5G
— MasRainman (@MasRainman) October 27, 2026
சென்னையை அடுத்த எண்ணூரில் பாரதியார் நகர் கடற்கரைப் பகுதியில் திடீரென கடல் அலைகள், பாதுகாப்புத் தடுப்பைத் தாண்டி சீற்றமாக காணப்படுகிறது. அலைகள் சீற்றம் காரணமாக கடற்கரை சாலையோரத்தின் மறுபக்கம் உள்ள பகுதிகளில் கடல்நீர் புகுந்துள்ளது. கடல் சீற்றம் காரணமாக எண்ணூர் கடற்கரைச் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மாற்றுப் பாதையில் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. கடற்கரையை ஒட்டிய குடியிருப்புப் பகுதிகளில் கடல் நீர் புகுந்ததுடன், சாலையோரம் நின்ற வாகனங்கள் அலையின் தாக்கத்தால் கவிழ்ந்தன. அர்னாப் புயல் ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியதால் கடற்கரைப் பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

