பழனியில் 31 நாட்களுக்கு ரோப் கார் இயங்காது!
பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை பராமரிப்பு பணிக்காக வரும் 15ம் தேதி முதல் 31 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் தினசரி வருகை புரிந்து, சாமி தரிசனம் செய்வது வழக்கம். தரிசனத்திற்காக முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து மலை கோயிலுக்கு செல்ல படிப்பாதை யானை, பாதை பிரதான வழியாக உள்ளது. அத்துடன் மின் இழுவை ரயில் மற்றும் ரோப் கார் சேவைகளும் இயக்கப்பட்டு வருகிறது. விரைவாகவும், இயற்கை அழகை ரசித்த படியும் ரோப் கார் மற்றும் மின் இழுவை ரயிலில் செல்லலாம்.
இந்நிலையில் பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை பராமரிப்பு பணிக்காக வரும் 15ம் தேதி முதல் 31 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் படிப்பாதை, யானை பாதை, மின் இழுவை ரயிலை பயன்படுத்தி மலைக்குச் சென்று சாமி தரிசனம் செய்யலாம் என கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.


