பழனியில் நாளை முதல் மீண்டும் ரோப் கார் சேவை
பழனி முருகன் கோயிலில் நாளை (ஆக.20) முதல் மீண்டும் ரோப் கார் சேவை தொடங்கப்படவுள்ளது.

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் தினசரி வருகை புரிந்து, சாமி தரிசனம் செய்வது வழக்கம். தரிசனத்திற்காக முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து மலை கோயிலுக்கு செல்ல படிப்பாதை யானை, பாதை பிரதான வழியாக உள்ளது. அத்துடன் மின் இழுவை ரயில் மற்றும் ரோப் கார் சேவைகளும் இயக்கப்பட்டு வருகிறது. விரைவாகவும், இயற்கை அழகை ரசித்த படியும் ரோப் கார் மற்றும் மின் இழுவை ரயிலில் செல்லலாம்.
வருடாந்திர பராமரிப்புப் பணிக்காக, ஜூலை 15 ஆம் தேதி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ரோப் கார் சேவை, மீண்டும் நாளை முதல் தொடங்கும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 2 நிமிடங்களில் மலைக் கோயிலின் உச்சியை அடையும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கம்பிவட ஊர்திக்கு பக்தர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

