சென்னை மெரினா- பெசன்ட் நகர் வரை ரோப் கார் திட்டம்

 
rope car

சென்னை மெரினா- பெசன்ட் நகர் வரை 4.6 கிலோமீட்டர் நீளத்துக்கு ரோப் கார் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. 


சென்னையில் மெரினா முதல் பெசன்ட் நகர் வரை ரோப்வே திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறு ஆய்வு செய்யப்படவுள்ளது. இதற்கான சாத்தியக் கூறு ஆய்வை  ஆய்வு செய்வதற்கான டெண்டரை தேசியநெடுஞ்சாலை சரக்கு மேலாண்மை நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த சாத்தியக் கூறு அறிக்கையில், இந்த பகுதியில் சுற்றுலா வசதிகள், பயணிகளின் எண்ணிக்கை உள்ளிட்டவைகள் ஆய்வு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெண்டர் அளிக்கப்பட்டடு 24 மாதங்களில் சாத்தியக் கூறு அறிக்கை மத்திய அரசுக்கு சமர்பிக்கப்படும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. மெரினா கலங்கரை விளக்கம் முதல் பட்டினபாக்கம் , எம்ஆர்சி நகர் வழியே பெசன்ட் நகர் வரை இந்த ரோப் கார் சேவை அமைப்பது குறித்து ஆய்வு செய்யபட உள்ளது. குறிப்பாக கடற்கரை ஒட்டி இதற்கான சாத்திய கூறுகள் உள்ளதா என்பது பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

சில மாதங்களுக்கு முன்பு, மெரினாவில் ரோப்கார் கொண்டு வருவது குறித்து சென்னை மாநகர மேயர் பிரியா சில முக்கிய தகவல்களைத் தெரிவித்திருந்தார்.அப்போது அவர் கூறுகையில்,முதலில் 3.5 கி.மீ.,தூரத்திற்கு இந்த ரோப் கார் திட்டம் கொண்டு வரப்படும் என்று கூறி இருந்தது குறிப்பிடதக்கது.