ரூட் தல விவகாரம்- பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இருவர் கைது

பச்சையப்பன் கல்லூரியில் ரூட்டு தல பிரச்சனை காரணமாக கல்லூரியில் வெளியே பேருந்து ஏறி நின்று ஆட்டம் போட்டு பின் சாலையில் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்திய இரண்டு கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 5-ம் தேதி ரூட்டு தல விவகாரத்தில் சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பேருந்து மீது ஏறி அடாவடி செய்த வீடியோ வெளியாகி உள்ளது. பிராட்வே - பூந்தமல்லி ரூட் மாணவர்கள் ரூட்டு தல விவகாரத்தில் சாலையின் நடுவே நாட்டு பட்டாசு கொளுத்தி போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தினர். மேலும் பேருந்து மீது ஏறி ஆட்டம் போட்டு போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியதுடன் சாலையின் சென்ற பயணிகளுக்கு பெரும் தொல்லை கொடுத்த வீடியோ வெளியானது.
ரூட் தல விவகாரம்- பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அடாவடி!
— Spark Media (@SparkMedia_TN) July 9, 2024
கடந்த 5-ந்தேதி ரூட் தல விவகாரத்தில் பேருந்து மீது ஏறி மாணவர்கள் ஆட்டம் போட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது
போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்திய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை… pic.twitter.com/HQTi1otuOp
இந்நிலையில் அந்த வீடியோ காட்சி பதிவுகளை வைத்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களை அடையாளம் கண்டு வரும் கீழ்பாக்கம் போலீசார், மூன்றாம் ஆண்டு பி காம் மாணவர் வானகரம் பகுதியைச் சேர்ந்த சரண் என்கிற சரவணன் (20) திருவேற்காடு பகுதியில் சேர்ந்த தங்கமணி( 22) ஆகிய இரண்டு மாணவர்களை கைது செய்தனர்.