ரூட் தல விவகாரம்- பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அடாவடி

 
ரூட்டு தல

ரூட்டு தல விவகாரத்தில் சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பேருந்து மீது ஏறி அடாவடி செய்த வீடியோ வெளியாகி உள்ளது. கடந்த 5-ம் தேதி பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ரூட்டு தல பிரச்சனையில் ஈடுபட்டு பஸ்ஸின் மீது ஏறி ஆட்டம் போட்ட வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

பிராட்வே 2 பூந்தமல்லி ரூட் மாணவர்கள் ரூட்டு தல விவகாரத்தில் சாலையின் நடுவே நாட்டு பட்டாசு கொளுத்தி போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தினர். மேலும் பேருந்து மீது ஏறி ஆட்டம் போட்டு போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியதுடன் சாலையின் சென்ற பயணிகளுக்கு பெரும் தொல்லை கொடுத்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.


காவல்துறையினர் முன்னிலையில் நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவர்கள் பேருந்தை நிறுத்தி பேருந்தின் மீது ஏறி ஆட்டம் போட்டதும், கல்லூரியின் குறுக்காக நின்று சாலை மறியலை ஏற்படுத்தியதும், சாலையின் நடுவே பட்டாசு வெடித்து போக்குவரத்தை தடுத்ததுமான வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்திய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வலுத்துள்ளது.