மேற்கூரை இடிந்த விவகாரம்: ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ்

 
ttn

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்ட வ.உ.சி. மைதானத்தின் பார்வையாளர் அரங்கின் நிழற்குடை  இடிந்து விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.  பாளையங்கோட்டை யில் வஉசி மைதானத்தில் பார்வையாளர் போட்டிகளை அமர்ந்து பார்க்கும் வகையில் நிழற்குடை அமைக்கப்பட்டது. கடந்த செப்டம்பர் 8ம் தேதி சுமார் 14.95 கோடி செலவில் புறநகர் அமைக்கப்பட்ட இந்த புதிய மைதானத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

tn

 இந்த சூழலில் நெல்லையில் பெய்த மழையின் காரணமாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்ட வஉசி மைதானத்தின் பார்வையாளர் அரங்கம் நிழற்குடை திடீரென சரிந்து விழுந்து  விபத்தில் சிக்கியது. இது குறித்த தகவல் மாநகராட்சி ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி விபத்து நடைபெற்ற இடத்தை பார்வையிட்டதோடு மைதானத்தை மூடுவதற்கு உத்தரவிட்டார். அத்துடன் மேற்கூரை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இது குறித்த விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும் கூறியிருந்தார்.

nellai

இந்நிலையில் நெல்லையில் வஉசி மைதானம் மேற்கூரை இடிந்து விழுந்த விவகாரத்தில் ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் அனுப்பப்ட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார். மேற்கூரை இடிந்து விழுந்த இடத்தில் ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.