ரஜினி பற்றிய கேள்விக்கு ரோஜா கொடுத்த ரியாக்‌ஷன் - கடுப்பான ரசிகர்கள்

 
rஒ

ரஜினி குறித்த கேள்விக்கு பதில் அளிக்காமல் அல்லது பதில் சொல்லாமல் அந்த கேள்வியை தவிர்த்து செல்லாமல் குலவை போட்டு ரியாக்சன் கொடுத்துள்ளார் ரோஜா. இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.  இதை பார்த்த  ரசிகர்கள் ரோஜாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

 ஆந்திர மாநிலத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் என்டிஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக அதில் பங்கேற்று இருந்தார்.  என் டி ஆரின் மகன் பாலகிருஷ்ணாவும் மருமகன் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு அந்த விழாவில் பங்கேற்றிருந்தனர்.  விழாவில் என்டிஆர் இன் பெருமைகளை பேசிய ரஜினிகாந்த் , சந்திரபாபு நாயுடு -பாலகிருஷ்ணா ஆகியோரின் பெருமைகளையும் பேசினார் .

ர்

சந்திரபாபு நாயுடு ஆட்சியில் ஹைதராபாத் எப்படி வளர்ச்சி பெற்றது என்பது குறித்து எடுத்துச் சொன்னார் ரஜினி.  இவ்வாறு பேசியது தற்போதைய ஆந்திராவில் ஆளும் அரசு ஜெகன்மோகன் ரெட்டி அரசுக்கு கடும் எரிச்சலை கொடுத்திருக்கிறது.   இதனால் அக்கட்சியில் உள்ள நிர்வாகிகள் சிலர் ரஜினியை கடுமையாக விமர்சித்தனர் . 

கட்சியின் நிர்வாகியும் ஜெகன்மோகன் ரெட்டி அமைச்சரவையில் சுற்றுலா, இளைஞர் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சராக இருக்கும் ரோஜா ரஜினியை கடுமையாக விமர்சித்தார்.  ரஜினிக்கு அரசியல் தெரியாது அவர் ஒரு ஜீரோ என்று கடுமையாக விமர்சித்து இருந்தார்.   ரஜினி ஆந்திர அரசியல் தெரியாமல் சொன்னது தவறு என்றும் கடுமையாக ரோஜா விமர்சித்து வந்தார் .

ஆனால், ரஜினி சொன்னது எல்லாமே உண்மைதான்.  என்டிஆர்க்கும் சந்திரபாபு நாயுடுவுக்கும் உள்ள  உறவில் தான் சில சந்தேகங்கள் இருக்கின்றன.  மற்றபடி ரஜினி சொன்ன அனைத்தும் உண்மைதான் . அதில் ஒன்றும் தவறில்லை .  தெரியாமல் ஒன்றும் ரஜினி அப்படி பேசவில்லை என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.  அதே நேரம் இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் செல்வாக்கு மிகுந்த நபராக உள்ளார் ரஜினிகாந்த் .  அப்படிப்பட்டவரை எப்படி ஜீரோ என்று சொல்லலாம் என்று நடிகையும் அமைச்சருமான ரோஜாவே கடுமையாக விமர்சித்து வந்தனர்.

ரொ

 சந்திரபாபு நாயுடு ஜெகன்மோகன் ரெட்டி அரசுக்கு ரஜினியை விமர்சித்ததற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று வழிபாடு வழிபட்டுள்ளார் ரோஜா.  செய்தியாளர்கள் அவரை சந்தித்தபோது பல்வேறு கேள்விகள் குறித்து பதில் அளித்து வந்தவரிடம் , ரஜினிகாந்தை தொடர்ந்து விமர்சிப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப,  அதற்கு குலவை சத்தமிட்டு சென்றார்.

இந்த வீடியோ வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது . இதை பார்த்த ரசிகர்கள்,  அந்த கேள்விக்கு பதில் அளித்து இருக்கலாம் . இல்லாவிட்டால் அந்த கேள்வியை தவிர்த்து பதில் அளிக்காமல் சென்றிருக்கலாம் . ஆனால் குலவை போட்டு ரஜினியை கிண்டல் செய்திருக்கிறார் என்று நெட்டிசன்கள் கடுமையாக  கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.