முதல்வர் விஜயை கவர்ந்த ‘ராக்கி’

 
அ

சென்னையில் நடைபெற்ற காவல்துறை விருது வழங்கும் நிகழ்ச்சியில், மோப்ப நாய் ‘ராக்கி’ முதலமைச்சர் விஜய்க்கு பூங்கொத்து வழங்கிய தருணம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. காவல்துறை வீரர்களுடன் ராக்கிக்கும் பாராட்டுகள் குவிந்தன.


முதல்வர் விஜய் தலைமையில் போலீசாருக்கு பதக்கங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் மோப்ப நாய் ’ராக்கி’ முதல்வர் விஜய்க்கு பூங்கொத்துக் கொண்டு வந்தது. இதனை முதல்வர் விஜய் ரசித்து பார்த்தார். அப்போது  போலீசார் இருவர் சல்யூட் அடித்தபோது மோப்ப நாயும் குனிந்து தனது பாணியில் மரியாதை செலுத்தியது. இதனைப் பார்த்து ஆச்சரியப்பட்ட விஜய் மோப்ப நாய்க்கு சல்யூட் செலுத்தினார். மீண்டும் மோப்பநாய் மரியாதை செலுத்தி திரும்பிய போது முதல்வர் விஜய் மீண்டும் சல்யூட் அடித்து அந்த மோப்ப நாய் செல்லும் வரை அதை பார்த்துக் கொண்டே இருந்தார். மோப்பநாய் பிராணியாக இருந்தாலும் அதற்கும் மரியாதை வைத்த முதல்வர் விஜயை பார்த்து பலரும் நெகழ்ச்சி அடைந்தனர். தற்போது இந்த வீடியோ தான் டிரெண்டாகி வருகிறது.