ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கம்..! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்தது..!

 
Q Q

தங்கம் விலை மீண்டும் எகிறத் தொடங்கியிருந்தது. தங்கத்தின் மீது முதலீட்டாளர்களின் கவனம் திரும்பி இருப்பதால் அதன் விலை உயர ஆரம்பித்திருப்பதாக சொல்லப்படுகிறது.

தங்கம் விலை நேற்று முன்தினம் ஒரேநாளில் ரூ.1,760 உயர்ந்து ஒரு சவரன் ரூ.93 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.100-ம், சவரனுக்கு ரூ.800-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 600-க்கும், ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்து 800-க்கும் விற்பனை ஆனது. நேற்று முன்தினம் ஒரு சவரன் ரூ.93 ஆயிரத்தை மீண்டும் தாண்டியிருந்த நிலையில், நேற்று விலை குறைவால் ரூ.93 ஆயிரத்துக்கு கீழ் சென்றது.

இந்நிலையில் இன்று தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிரடியாக உயர்ந்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 800-க்கும், சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.94ஆயிரத்து 400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.9 உயர்ந்து ஒரு கிராம் ரூ.182-க்கும், ஒரு கிலோ ரூ. 1 லட்சத்து 82 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

13.11.2025 ஒரு சவரன் ரூ.94,400 (இன்று)

12.11.2025 ஒரு சவரன் ரூ.92,800 (நேற்று)

11.11.2025 ஒரு சவரன் ரூ.93,600

10.11.2025 ஒரு சவரன் ரூ.91,840

09.11.2025 ஒரு சவரன் ரூ.90,400

08.11.2025 ஒரு சவரன் ரூ.90,400

07.11.2025 ஒரு சவரன் ரூ.90,160