ஒரே இரவில் 8 கடைகளின் பூட்டை உடைத்து கைவரிசை- கடலூரில் கொள்ளையர்கள் அட்டகாசம்

 
ச்

கடலூரை சுற்றி ஒரே இரவில் 8 கடைகளை உடைத்து பணம், பொருட்களை திருடி சென்றதால் வியாபாரிகள் பீதியடைந்துள்ளனர்.

கடலூர் பகுதியில் ஒரே இரவில் 8 கடைகளை உடைத்து மர்மகும்பல் பணம் மற்றும் பொருட்களை திருடி சென்றுள்ளனர். கடலூர் புதுப்பாளையத்தில் செல்போன் சர்வீஸ் கடையை உடைத்து செல்போன் மற்றும் 2000 ரூபாய் பணம், கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவில் அருகாமையில் செல்போன் சர்வீஸ் கடையை உடைத்து 15 ஆயிரம் ரூபாய் பணம், பேக் விற்பனை செய்யும் கடையை உடைத்து பொருட்கள் திருடி சென்றனர். அதன் அருகாமையில் இருந்த கடையை உடைத்த போது காலி கடையாக இருந்ததால் அங்கிருந்து சென்றனர். மேலும் முதுநகர் பகுதியில் உள்ள ஒரு கடையை உடைத்து திருடு நடந்துள்ளது. 

இதனை தொடர்ந்து கடலூர் அடுத்த நத்தப்பட்டு பகுதியில் டைலர் கடையை உடைத்து 1500 ரூபாய் பணம் , மருந்து கடை மற்றும் ஹெல்மெட் விற்பனை செய்யும் கடையை உடைத்து 3500 பணம் மற்றும் மூன்று ஹெல்மெட் ஆகியவற்றை மர்மகும்பல் திருடி சென்று உள்ளது. இந்த நிலையில் ஒரே இரவில் கடலூர் சுற்றியுள்ள பகுதிகளில் 8 கடைகளில் உடைத்து பணம் மட்டும் பொருட்கள் திருடிய சம்பவம் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் கடும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.