பெண்ணை தாக்கி சாலையில் தரதரவென்று இழுத்துச் சென்ற கொள்ளையன் - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

 
vi

தனியாக நடைபயிற்சி சென்ற பேராசிரியை-ஐ பின்னால் சென்று தாக்கி சாலையில் தரதரவென்று இழுத்துச் சென்ற கொள்ளையன்  வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  சம்பந்தப்பட்ட கொள்ளையனை போலீசார் பிடிக்க முற்பட்ட போது தப்பியோட முயற்சித்ததால் கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார்.

 திருச்சி மத்திய பேருந்து நிலையத்தின் பின்புறம் இருக்கும் வ. உ. சி சாலையைச் சேர்ந்தவர் சீதாலட்சுமி.  53 வயதான இவர் திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.  

se

 இவர் வழக்கம் போல் கடந்த 12ஆம் தேதி அன்று ஞாயிற்றுக்கிழமை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் இருக்கும் வெஸ்ட்ரி மேல்நிலைப் பள்ளியின் மைதானத்தில் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு,  நடை பயிற்சிக்கு சென்றிருக்கிறார் .  தனியாக அந்த பெண் நடை பயிற்சி செல்வதை கவனித்த மர்ம நபர் அவரை பின்தொடர்ந்து சென்று உருட்டுக்கட்டையால் தலையில் ஓங்கி அடித்திருக்கிறார்.  இதில் மயங்கி விழுந்த பெண்ணை தரதரவென்று சாலையில் இழுத்துக்கொண்டு சென்றிருக்கிறார். 

 ஒரு ஓரமாக அவரை போட்டுவிட்டு அவரது இருசக்கர வாகனத்தையும் செல்போனையும் எடுத்துக்கொண்டு தப்பி ஓடி இருக்கிறார்.

 சீதாலட்சுமி கொடுத்த புகாரில் போலீசார் விசாரணை நடத்தியதில் திருக்காட்டுப்பள்ளி பழமானேரி பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பது தெரிய வந்திருக்கிறது. அவரை பிடிக்க முற்பட்ட போது இருசக்கர வாகனத்தில் வேகமாக தப்பி இருக்கிறார்.  அப்போது தடுப்புக்கட்டையில் மோதி கீழே விழுந்து கால் உடைந்து கிடந்த அவரை திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் போலீசார்.

 இதற்கிடையில் அந்த பெண்ணை நடுரோட்டில் தரதரவென்று செந்தில்குமார் எழுத்துச் செல்லும் காட்சிகளை சிலர்  தூரத்தில் இருந்து வீடியோ எடுத்து வலைத்தளங்களில் பதிவிட்டு  உள்ளனர்.  அது வைரலாகி  கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.