பழனியில் ஆழ்துளை குழாயை மூடி சாலை அமைப்பு

 
பழனி

பழனி நகராட்சி பெரியநாயகிஅம்மன் கோயில் அருகே ஆழ்துளை குழாயை மூடி சாலை அமைக்கப்பட்டிருப்பதை நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Image


பழனி நகராட்சி 7-வது வார்டில் உள்ள கீழ் வடம்போக்கி தெருவில் பெரியநாயகி அம்மன் கோயில் முன்பு இருந்த சாலை மிகவும் சேதமடைந்து இருந்தது. தைப்பூச திருவிழா நடைபெறும் போது பெரியநாயகி அம்மன் கோயிலுக்கு அதிக அளவில்  பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் சேதமடைந்த சாலையை   அகற்றிவிட்டு புதிதாக சாலை நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டது.  புதிய தார் சாலை அமைக்கும் பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் சாலை ஓரத்தில் இருந்த ஆழ்துளை குழாயை கவனிக்காமல் கவனகுறைவாக ஆழ்துளை குழாயை மூடி சாலை அமைத்து உள்ளார். 

பொதுமக்கள் பயன்படுத்தி வந்த ஆழ்துளை குழாய் மூடப்பட்டது குறித்து நகராட்சி அதிகாரிகளுக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். உடனடியாக ஆய்வு செய்த நகராட்சி ஆணையர் கமலா குழாயை உயரப்படுத்தி பொதுமக்கள் தண்ணீர் பிடிக்கும் வகையில் உடனடியாக ஆழ்துளை குழாயை சரி செய்ய உத்தரவிட்டார். மேலும்  சாலை அமைக்கும் பணியின் போது கவக்குறைவாக இருந்த ஒப்பந்ததாரர் மற்றும்  நகராட்சி  மேற்பார்வையாளரையும் ஆணையர் கமலா கண்டித்தார்.