தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளது- ஆளுநர் ரவி
தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி தனது சுதந்திர தின செய்தியில், திமுக அரசை சாடியுள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி தனது சுதந்திர தின செய்தியில், “தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் திறன் தேசிய சராசரியைவிட மிகவும் குறைவாக உள்ளது. 50 சதவீதத்துக்கும் அதிகமான உயர்நிலைப்பள்ளி மாணவர்களால் 2 இலக்க கூட்டல் கழித்தலைக் கூட செய்ய முடியவில்லை. ஏழைகளுக்கு எதிராக சமூகப் பாகுபாடு உள்ளது. இளைஞர்களிடம் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளது.
ஏழைகள், விளிம்பு நிலையில் இருப்போருக்கு எதிராக கல்வி சமூக பாகுபாடு உள்ளது. 2024ல் 56 சதவீதம் அளவுக்கு போக்சோ வழக்குகள் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் பெண்களும் குழந்தைகளும் வீட்டைவிட்டு வெளியே வர அச்சப்பட்டும், பாதுகாப்பற்றவர்களாகவும் உணர்கிறார்கள். அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் சக்திபடைத்தவர்கள் செயல்படுவதால் போதைப் பொருள் விநியோகத்தை கட்டுப்படுத்துவது கடினமாகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

