நாளை அனைவரும் தங்கள் வீடுகள் முன் தீபம் ஏற்றி வழிபடுங்கள்- ஆளுநர் ரவி

 
rn ravi

அனைவரும் தங்கள் வீடுகள் மற்றும் குடியிருப்புகள் முன்பு தீபம் ஏற்றி இந்நாளை கொண்டாடி வழிபடுமாறு  கேட்டுக்கொள்கிறேன் என ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.

rn ravi

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் மிகப்பிரமாண்ட மாக ராமர் கோயில் கும்பாபிஷேகம் மாற்றும் பால ராமர் சிலை பிரதிஷ்டை நாளை 22ம் தேதி நடைப்பெறுகிறது.  இந்த வைபவத்தை உலகமே உற்று நோக்கும் வகையில்  ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியால் கோயில் பணிகள் முழு வீச்சில் முடிந்துள்ளன. நாடு முழுதும் உள்ள பக்தர்கள் இவ்விழாவிற்கு ஆயத்தமாகி வருகின்றனர். இந்நிலையில் ஆளுநர் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில், “நமது தேசம் இப்போதெல்லாம் ஸ்ரீ ராம பக்தியில் மூழ்கியுள்ளது. நமது  தமிழ்நாட்டு சகோதர,  சகோதரிகள் மத்தியில் இதை நானே பார்த்து உணர்ந்திருக்கிறேன். 'ஸ்ரீ ராமர்' பாரதத்தின் தேசிய அடையாளம். நாளை ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தியில் பால ராமர் பிராண பிரதிஷ்டையுடன் தேசம் ஒரு அற்புதமான ஸ்ரீ ராமர் கோயிலை பெறும். இந்த வரலாற்றுப் பொன்னாளை ஒவ்வொரு வீட்டின் முன்பும் தீபம் ஏற்றி ஒட்டுமொத்த தேசமும் கொண்டாடும். தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகள் அனைவரும் தங்கள் வீடுகள் மற்றும் குடியிருப்புகள் முன்பு தீபம் ஏற்றி இந்நாளை கொண்டாடி வழிபடுமாறு  கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.