தவறான கல்வி கொள்கையால்தான் வேலைக்காக கையேந்தும் நிலை: ஆளுநர் ரவி

 
rn ravi

தவறான கல்வி கொள்கையால் படித்த இளைஞர்கள் வேலை கிடைக்காமல் உள்ளதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

உதகையில் நடைபெற்று வரும் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மாநாட்டில் உரையாற்றிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, “புதிய கல்விக் கொள்கை தான் நாட்டின் எதிர்காலம். புதிய கல்விக் கொள்கை தான் புதிய இந்தியாவை உருவாக்கும். தவறான கல்விக் கொள்கையில் படித்த இளைஞர்கள் வேலைக்காக கையேந்தும் நிலை உள்ளது. உலகமே மாறிவரும் நிலையில் நாம் மட்டும் கல்வியில் பின் தங்கியுள்ளோம்.

நமது நாடு தற்போது பெரிய மாற்றத்திற்காக தயாராக உள்ளது. தமிழ்நாடு ஆளுநராக நான் பொறுப்பேற்ற போது தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மிகவும் மோசமான நிலையில் இருந்தன. ஒவ்வொரு பல்கலைக்கழகங்களும் தனித்தனியாக செயல்பட்டன” எனக் கூறினார்.


-