ஆசிரியருக்கு கால்களை பிடித்து விட்டு கல்வி கற்றேன்- ஆளுநர் ரவி

 
rn ravi

கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் எண்ணித்துணிக என்ற பெயரில் கலந்துரையாடல்  நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆசிரியர்கள், கல்வியாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது குலக்கல்வியை உயர்த்திப் பேசியதால் சர்ச்சை ஏற்பட்டது.

rn ravi

எண்ணித்துணிக என்ற பெயரில் கலந்துரையாடல்  நிகழ்ச்சி உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “தினமும் 8 கிலோமீட்டர் நடந்து சென்று கல்வி கற்றேன். சிறுவனாக இருந்தபோது எனது குருவான ஆசிரியர்களுக்கு குளிக்க நீர் இறைத்து கொடுத்தேன், கால்களை பிடித்து விட்டேன். ஆசிரியர்களுக்கு சேவை செய்து கல்வி கற்பதே இந்தியாவின் பாரம்பரியம். மாணவரை மதிப்பெண் வாங்க வைப்பது மட்டும் ஆசிரியரின் கடமையல்ல, நல்வழிப்படுத்துவதும் கடமை. 2027 ஆம் ஆண்டுக்குள் உலக நாடுகளை வழிநடத்தும் இடத்திற்கு பாரத் முன்னேறும்.  மனிதர்களின் இடத்தை இயந்திரங்களால் எப்போதும் நிரப்ப முடியாது. ஆகவே ஆசிரியர்களுக்கான இடத்தை எந்த தொழில்நுட்பமும் பூர்த்தி செய்ய இயலாது.

ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையேயான உறவு அப்படித்தான் இருந்தது. ஆசிரியர்கள், மாணவர்களை தண்டிப்பது அவர்களது நல்லதுக்கு தான் என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்ளவில்லை. பெற்றோர்கள் ஆசிரியர்களை நம்புவது கிடையாது.சட்டமும் ஆசிரியர்கள் தண்டிக்க கூடாது என்று தான் கூறுகிறது.” என்றார்.