இதுதாங்க சனாதன தர்மம்! மீண்டும் சர்ச்சையை கிளப்பும் ஆளுநர் ரவி

 
rn ravi

சனாதன தர்மம் அனைவரும் ஒரே குடும்பம் என சொல்கிறது என ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.

rn ravi

சிக்கிம் மற்றும் கோவா மாநிலம் உருவான தின விழா கொண்டாட்டத்தில் உரையாற்றிய ஆளுநர் ஆர். என். ரவி, “நமது விருந்தோம்பல் குணத்தால் நமது டி.என்.ஏவில் சனாதன தர்மம் உள்ளது. இந்திய மக்களிடம் அது முழுவதும் நிறைந்துள்ளது. அரசால் எதையும் தனியாக செய்ய முடியாது மக்கள் நினைத்தால் மட்டுமே எந்தவொரு திட்டமும் வெற்றி பெறும். அதேபோல் பாரத நாட்டில் நாம் அனைவரும் ஒன்று என்பதை வலியுறுத்தும் சனாதனமும் ஒரு மக்கள் இயக்கமாக மாற வேண்டும். நாட்டின் ஒரு பகுதியில் இருந்து மக்கள் மற்றொரு பகுதிக்கு எந்த விதமான தடையும் இன்றி பயணிக்க முடியும். தமிழ்நாட்டில் இருந்து சென்ற போதிதர்மர் சீனாவிற்கு சென்று பல சாதனைகளை படைத்தார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இணைந்திருந்தாலும், சிக்கிம் மற்றும் கோவா மாநிலங்கள் இந்தியாவுடன் என்றுமே கைகோர்த்து இருந்துள்ளன. சிக்கிம் பூமியின் சொர்க்கம்.  35 ஆண்டுகளுக்கு மேலாக சிக்கிம் மாநிலத்தில் பணியாற்ற எனக்கு வாய்ப்பு கிடைத்தது. சிக்கிம் மாநிலத்தின் ஒவ்வொரு பகுதியும் வளமான கலாச்சாரத்தை கொண்டுள்ளது. இந்த உலகத்தில் இருக்கும் மற்ற நாடுகள் பாரதத்தின் வளமான கலாச்சாரத்தில் பாதி அளவினை கூட கொண்டிருக்கவில்லை” என்றார்.