"பிரதமர் மோடி திருவள்ளுவரின் மிகப்பெரிய பக்தர்”- ஆளுநர் ரவி

 
rn ravi rn ravi

தேசிய கல்விக் கொள்கையின் அடி நாதம் வள்ளுவர் என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

விரைவில் இந்தியா முழுவதையும் ராம ராஜ்ஜியமாக மாற்றுவோம்- ஆளுநர் ரவி

சென்னையில் நடைபெற்ற திருவள்ளுவர் திருநாள் விழாவில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “‘கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக' எனும் குறளின் அடிப்படையில் புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக்கொள்கையின் அடி நாதந்தில் திருவள்ளுவர் இருக்கிறார். சொல்லப்போனால் புதிய கல்விக் கொள்கை உருவாக்க காரணமாக திருவள்ளுவர்தான் இருந்துள்ளார்.
70 ஆண்டுகளாக பிரிட்டிஷ் பாடத்திட்டத்தைதான் பயின்று வந்தோம். அது நம் அறிவை பெரிய அளவிற்கு வளர்க்கவில்லை.

பிரதமர் நரேந்திர மோடி திருவள்ளுவரின் மிகப்பெரிய பக்தர். திருவள்ளுவரின் கொள்கையை உலகம் முழுவதும் பரப்பி வருகிறார். பிரதமர் மோடியின் தொலைநோக்கு திட்டங்களுக்கு திருக்குறள் உந்துதலாக இருக்கிறது” என்றார்.