#BREAKING ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை மீண்டும் திருப்பி அனுப்பினார் ஆளுநர் ரவி

 
MKstalin rn ravi

ஆன்லைன் சூதாட்ட தடை தொடர்பான மசோதாவை அரசுக்கு  மீண்டும் திருப்பி அனுப்பினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. 

ravi

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிப்பது மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் முன்னாள் நீதிபதி சந்துரு தலைமையில் குழு நியமிக்கப்பட்டது. அந்தக்குழு அளித்த அறிக்கையின் படி,  ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய அவசர சட்டம் இயற்றப்பட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் 26 ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.  அதற்கு ஆளுநர் ரவியும் ஒப்புதல் அளித்ததால் அவசர சட்டம் அக்டோபர் 3ம் தேதி அரசு இதழில் வெளியிடப்பட்டது.

2022 ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி மீண்டும்  சட்டமன்றம் கூடியதை தொடர்ந்து அவசர சட்டத்தை நிரந்தரமாக்கும் சட்டம் மசோதா அக். 19ஆம் தேதி நிறைவேற்றப்பட்டு,   ஆளுநரின் ஒப்புதலுக்காக அக்டோபர் 28ஆம் தேதி அனுப்பப்பட்டது. மசோதா குறித்து ஆளுநர் எழுப்பிய கேள்விகளுக்கு அடுத்த நாளே அரசு விளக்கம் அளித்தும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. 6 மாதங்களாக ஒப்புதல் அளிக்காததால் அந்த சட்டமசோதா காலாவதியானது. 

online game

இதனால் மீண்டும் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்காக கடந்த ஆண்டு நவம்பா் 3- ஆம் தேதி அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. இதைத் தொடா்ந்து, நவ.5-ஆம் தேதி சட்டசபை கூட்டப்பட்டு, மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பிய ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி அரசுக்கே மீண்டும் திருப்பி அனுப்பினார். இரண்டாவது முறையாக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாவை 4 மாதங்களாக கிடப்பில் போட்டிருந்த நிலையில், மீண்டும் சில திருத்தங்களை செய்து அனுப்பும்படி ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.