அனைவருக்கும் தேசிய வாக்காளர் தின வாழ்த்துக்கள் - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

 
rn ravi

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தேசிய வாக்காளர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 25ம் தேதி தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தேசிய வாக்காளர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "தேசிய வாக்காளர் தினத்தில், அனைவருக்கும், குறிப்பாக நமது இளம் வாக்காளர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்! இந்த நாளில், நமது எதிர்பார்ப்புகளை  பிரதிபலிக்கக் கூடிய வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க, நமது வாக்குரிமையைப் பயன்படுத்தி நமது தேசத்துக்கான கடமையை நிறைவேற்ற மீண்டும் உறுதி ஏற்போம். 


நமது தீவிர பங்களிப்பு, நம் ஜனநாயக நெறிமுறைகளை மேலும் வலுப்படுத்தி நமது ஜனநாயகத்தை இன்னும் முற்போக்கானதாகவும், பங்கேற்பு மிக்கதாகவும்  துடிப்பானதாகவும் மாற்றும் என குறிப்பிட்டுள்ளார்.