ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணிக்கு கடும் பின்னடைவு..! பாஜக கூட்டணி முன்னிலை..!
பீகார் சட்ட சபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், ஆரம்பம் முதலே பாஜக-ஜேடியூ கூட்டணி ஆதிக்கம் செலுத்தியது.
பாஜகவில் முக்கிய தலைவர்கள் அனைவரும், தங்களது தொகுதியில் எதிர்க்கட்சி வேட்பாளர்களை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் முன்னணியில் இருந்து வருகின்றனர். 101 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 76க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. அதேபோன்று 101 தொகுதிகளில் போட்டியிட்ட ஜேடியூ, 77க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.
மேலும், எதிர்க்கட்சியான ஆர்ஜேடி 44 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 12 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது. காலை 10.30 மணி அளவில் பாஜக கூட்டணி 174 இடங்களிலும், ஆர்ஜேடி கூட்டணி 63 தொகுதிகளிலும் முன்னணியில் இருந்து வருகிறது. அதே சமயத்தில், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் ஜன் சுராஜ் கட்சி எந்த ஒரு இடத்திலும் முன்னிலை பெறவில்லை.
கடந்த தேர்தலில் 80க்கும் மேற்பட்ட இடங்களை வென்றிருந்த ஆர்ஜேடி-க்கு, தற்போதைய முன்னணி நிலவரம் கடும் பின்னடைவை கொடுத்துள்ளது. அதே வேளையில், எப்படியும் தேவையான மெஜாரிட்டை எட்டிப்பிடிப்போம் என்ற நம்பிக்கையில் இருந்த பாஜக-ஜேடியூ கூட்டணி, அவர்களின் எதிர்பார்ப்புக்கும் மேலாக அதிகப்படியான தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது.
ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் ரோகோப்பூர் தொகுதியில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார். அவரது சகோதரரும் ஐன்சக்தி ஜனதா தளம் கட்சி தலைவர் தேஜ் பிரதாப் யாதவ் மஹூவா தொகுதியில் பின்னடைவை சந்தித்து வருகிறார்.
பாஜகவை விட நிதிஷ்குமாரின் ஆர்ஜேடி, அதிக இடங்களில் முன்னிலை விகிக்கும் நிலையில், நிதீஷ்குமார் பீகார் மாநில முதல்வராக மீண்டும் பதவியேற்க அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரம்:-
தேசிய ஜனநாயக கூட்டணி - 191 ( பா.ஜ.க. - 80 , ஜே.டி.யு. - 84 , எல்.ஜே.பி. - 22, ஆர்.எல்.எம். - 1 , மற்றவை - 4)
இந்தியா கூட்டணி - 49 (ஆர்.ஜே.டி. - 37 , காங்கிரஸ் - 7 , இடது சாரிகள் - 5)
ஜன் சுராஜ் -0
மற்றவை - 3

