ரிதன்யா வழக்கு- கணவர், மாமனார், மாமியாரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி
ரிதன்யா வழக்கில் கணவர், மாமனார் மற்றும் மாமியாரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் கடந்த ஜூன் மாதம் 28 ஆம் தேதி வரதட்சணை கொடுமை காரணமாக ரிதன்யா என்கிற இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார். 300 சவரன் நகைகள் மற்றும் 75 லட்சம் ரூபாய் மதிப்பில் வரதட்சனை கொடுத்தும், மேலும் 200 சவரன் நகை வேண்டும் என கணவர் குடும்பத்தினர் ரிதன்யாவை கொடுமை படுத்தியதாக கூறப்படுகிறது. நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், ரிதன்யாவின் கணவர் கவின் குமார் மற்றும் மாமனார் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கவின் குமார் மற்றும் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் நீதிமன்றத்தில் ஜாமின் வழங்கக்கோரி மனுதாக்கல் செய்து இருந்தனர். இந்த மனு திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. ரிதன்யாவின் பெற்றோர் குடும்பத்தினர் தரப்பில் இந்த மனுவின் மீது இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வர மூர்த்தி மற்றும் மாமியார் சித்ராதேவியின் ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.


