நாட்டையே உலுக்கிய ரிதன்யா தற்கொலை வழக்கில் சிக்கிய புதிய ஆதாரம்..!

 
1 1

திருப்பூரை சேர்ந்த ரிதன்யா ஜூன் 29 அன்று வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டார்.இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, கவின் மற்றும் அவரது பெற்றோர் தன்னை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தியதாகக் கூறி தனது தந்தை அண்ணாதுரைக்கு வாட்சப்பில் ஆடியோ ஒன்றை அனுப்பி வைத்துள்ளார் .மேலும் தன்னுடைய தற்கொலைக்கு காரணம் கவின் மற்றும் அவரது குடும்பத்தினர் தான் என்று கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதனை தொடர்ந்து ரிதன்யாவின் ஆடியோவை ஆதரமாக கொண்டு திருப்பூர் மாவட்ட காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டனர்.

விசாரணையில் வரதட்சணை கொடுமை உறுதி செய்யப்பட்டத்தை தொடர்ந்து, சித்ரா தேவி, மாமனார் ஈஸ்வர மூர்த்தி மற்றும் கணவர் கவின்குமார் கைது செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.கவின் மற்றும் அவரது பெற்றோர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ரிதன்யா மரணம் தொடர்பான ஆர்.டி.ஓ விசாரணை நடைப்பெற்று வருகிறது.

வழக்கின் 3 பேரும் முக்கிய சாட்சிகளின் விசாரணை கருத்தில் கொண்டுள்ளப்பட்டு உள்ளது. இந்தச் சூழ்நிலையில் தொடர்ந்து சிறைதண்டனை தேவையில்லை என்று கூறி ரிதன்யாவின் கணவர் கே.இ. கவின் குமார், மாமனார் வி.கே. ஈஸ்வரமூர்த்தி மற்றும் மாமியார் இ. சித்ரா தேவி ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.மறு உத்தரவு வரும் வரை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் தினமும் இரண்டு முறை ஆஜராக வேண்டும், பாஸ்போர்ட்களை ஒப்படைக்க வேண்டும், நீதிமன்றத்தின் அனுமதியின்றி மாநிலத்தை விட்டு வெளியேறக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை நீதிபதி விதித்தார்.

ஜாமீனில் வெளிவந்த பிறகு, ரிதன்யாவின் வீட்டில் அவருக்குச் சொந்தமான இரண்டு மொபைல் போன்கள் கிடைத்ததாக கூறிய கவின் குமார், அவற்றை ஆய்வு செய்ய அனுமதி வழங்கும்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனு நீதிபதி என். சதீஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, ரிதன்யாவின் மொபைல்கள் குறித்து காவல்துறையினரிடம் கேட்டபோது அவர்கள் மறுத்துவிட்டதாகவும், திருமணத்தில் ரிதன்யாவுக்கு விருப்பமில்லையென நண்பர்களிடம் பேசினார் என்ற தகவல்கள் அந்த போன்களில் இருக்கக்கூடும் என்பதால் அவற்றை ஆய்வு செய்ய வேண்டுமென கவின் குமார் தரப்பில் வாதிடப்பட்டது.

இதற்கு பதிலளித்த காவல்துறை, மொபைல்கள் புலனாய்வு அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டால் அவை பரிசோதிக்கப்படும் என தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து, இரு மொபைல்களையும் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பி, அதற்கான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு நீதிபதி காவல்துறைக்கு உத்தரவிட்டார்.