திருமண நிகழ்வில் ரசகுல்லா தீர்ந்ததால் நடந்த களேபரம்!
பீகாரின் புத்தகயாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கடந்த 26ம் தேதி திருமண நிகழ்வு நடைபெற்றது. திருமண சடங்குகள் நடைபெற்று கொண்டிருந்தபோது உறவினர்களுக்கு உணவுகள் பரிமாறப்பட்டு கொண்டிருந்தது.
அப்போது ரசகுல்லா தீர்ந்ததாகக் கூறி மணமகள் குடும்பத்தினர் மணமகன் குடும்பத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம் ஒரு கட்டத்தில் மோதலாக மாறியதால் இரு தரப்பினரும் பிளாஸ்டிக் நாற்காலிகள், தட்டுகள் உள்ளிட்டவற்றை கொண்டு மாறி மாறித் தாக்கிக் கொண்டனர். இதனால் திருமண நிகழ்வு போர்களம்போல் மாறியது.
இதுகுறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரித்தனர். தொடர்ந்து திருமணத்தை நடத்தலாமென மணமகன் தரப்பினர் கூறிய நிலையில், திருமணத்தை நிறுத்திக்கொள்வதாகக் கூறி மணமகள் தரப்பினர் தாங்கள் கொண்டு வந்த நகைகளை எடுத்துச் சென்றனர்.
மேலும் தங்கள் மீது பொய்யாக வரதட்சனை புகார் அளித்ததாக மணமகனின் தந்தை கூறியுள்ளார். ரசகுல்லா தீர்ந்ததாகக் கூறி நடந்த களேபரத்தால் திருமணம் நின்றது இணையத்தில் வைரலாகி உள்ளது.


