தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பம்!!

 
school

தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

school reopen

இந்நிலையில் சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் இலவச மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. rte.t schools.gov.in என்ற இணையதளம் வழியாக பெற்றோர்கள் இன்று முதல் வருகிற மே 18 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது மாநிலம் முழுவதும் எட்டாயிரத்திற்கும் அதிகமான தனியார் பள்ளிகளில் சுமார் ஒரு லட்சத்து 10 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகளில் இலவசமாக படிக்க… இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

https://rte.tnschools.gov.in/ என்ற இணையதள முகவரியில் மாணவரின் புகைப்படம், சாதி சான்றிதழ், வருமான வரி சான்றிதழ், ரேஷன் கார்டு அல்லது ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். இலவசமாக கல்வி கற்க விண்ணப்பிக்கும் மாணவர்களின் இல்லம், பள்ளியில் இருந்து 1 கிலோ தூரத்தில் இருத்தல் அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   நர்சரி, பிரைமரி பள்ளிகளும் இதில் அடங்கும் என்பது கூடுதல் தகவல்.