அரிசி, பருப்பு விலை மேலும் அதிகரிக்கும்- RBI ஆளுநர் எச்சரிக்கை

மேற்கு வங்கத்தில் வித்தியாசமான பிரச்சாரத்தை தொடங்கும் ஜே.பி. நட்டா… ஒரு கைப்பிடி அரிசி திரட்டும் பா.ஜ.க.

மேற்கு ஆசிய மோதல் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்வும், உலக நிதிச்சந்தைகளில் நிலையற்ற தன்மையும் அதிகரிக்கலாம் என RBI ஆளுநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேற்கு ஆசிய மோதல் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்வும், உலக நிதிச்சந்தைகளில் நிலையற்ற தன்மையும் அதிகரிக்கலாம் என RBI ஆளுநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பலவீனமான பருவமழை மற்றும் எல் நினோ காரணமாக ரபி பருவம் பாதிக்கப்படலாம். இதனால் உணவுப் பொருட்களின் விலையில் அழுத்தம் ஏற்படலாம். 2026-27 நிதியாண்டின் சராசரி பணவீக்கம் 5.2% ஆகவும், 3-வது காலாண்டில் 6% ஆகவும் உயரலாம். உணவு மற்றும் எரிபொருள் விலை உயர்வால் பணவீக்கம் மேலும் பரவலாக அதிகரிக்கும் ஆரம்ப அறிகுறிகள் உள்ளன. பணவீக்க அபாயங்களுக்கு மத்தியில் ரெப்போ வட்டி 5.50% ஆக உயர்த்தப்பட்டுள்ளதால், கடன் வட்டி மற்றும் இஎம்ஐ மீதான அழுத்தமும் அதிகரிக்கலாம் எனக் கூறியுள்ளார்.