நாளை முதல் திருத்தப்பட்ட புதிய ரயில் கட்டணம் அமல்

 
train  train

நாடு முழுவதும் டிசம்பர் 26ஆம் தேதி முதல் ரயில் டிக்கெட் கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக ரயில்வே அறிவித்த நிலையில், நாளை முதல் திருத்தப்பட்ட ரயில் கட்டணங்கள் அமலுக்கு வருகிறது. 

train

சாதாரண வகுப்பில் 215 கி.மீ.க்கும் குறைவான தூரம் பயணித்தால் எந்தவித கட்டண உயர்வும் இல்லை. 215- 750 கிலோ மீட்டருக்குள்  பயணம் மேற்கொள்ள ரூ.5 உயர்த்தப்பட்டுள்ளது. 751 - 1,250 கிலோமீட்டர் பயணத்திற்கு ரூ.10 உயர்த்தப்படுகிறது. 1,251 - 1,750 கிலோ மீட்டர் பயணத்திற்கு ரூ.15 அதிகரிக்கப்பட்டுள்ளது. அனைத்து விதமான ரயில்களிலும் ஏசி பெட்டிகளில் பயணிக்க கி.மீ.க்கு 2 பைசா கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 1,751 கிலோ மீட்டருக்கு மேல் ரூ.20 கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 6,500 கிலோ மீட்டர் வரையிலான ரயில்களில் ரூ.10 மட்டுமே கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.


215 கி.மீ வரை பயணிப்போருக்கு கட்டண உயர்வு இல்லை. புறநகர் மின்சார ரயில்களின் கட்டணத்தில் மாற்றம் இல்லை. ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கும், சீசன் டிக்கெட் எடுப்போருக்கும் கட்டண உயர்வு இல்லை. டிக்கெட் கட்டண உயர்வின் மூலம் இந்தாண்டில் கூடுதலாக ரூ.600 கோடி வருவாய் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.