வருவாய் பற்றாக்குறை ரூ. 30,000 கோடியாக குறைத்துள்ளோம் - நிதியமைச்சர் பிடிஆர்..

கடும் நிதி நெருக்கடியிலும் வருவாய் பற்றாக்குறையை ரூ. 30,000 கோடியாக குறைத்துள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையின் இன்றைய அலுவல் பணிகளை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்ததும், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கினார். அப்போது, திராவிட இயக்க முன்னோடிகளின் வழிகாட்டுதலின்படி திராவிட மாடல் ஆட்சி நடந்துவருகிறது. முதலமைச்சர் தொடர்ந்து அளித்துவரும் ஊக்கத்தால் சிறப்பாக பணியாற்ற முடிகிறது; அதற்காக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக கூறினார். தமிழ்நட்டில் வருவாய் பற்றாக்குறையை ₹62,000 கோடியாக இருந்தது.
திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர் வருவாய் பற்றாக்குறையை ₹30,000 கோடியாக குறைத்துள்ளோம் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். கடும் நிதி நெருக்கடியிலும் மிகக்கடினமான சீர்திருத்தங்களை மேற்கொண்டு, வருவாய் பற்றாக்குறையை ₹30,000 கோடியாக குறைத்துள்ளோம். வரும் ஆண்டுகளில் இது மேலும் குறைக்கப்படும் என்றும் நிதியமைச்சர் கூறினார்.