இரட்டைமலை சீனிவாசனை எந்நாளும் நினைவில் கொள்வோம்!!
Updated: Sep 18, 2023, 09:52 IST1695010954098

இரட்டைமலை சீனிவாசனை எந்நாளும் நினைவில் கொள்வோம் என்று தினகரன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலார் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், "பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த சமூக சீர்திருத்த செயற்பாட்டாளர் திரு.இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவுதினம் இன்று.
”கல்வியே ஒடுக்கப்பட்டோரின் பேராயுதம்” என முழங்கி மக்கள் தொகைக்கு ஏற்ப கல்வி, உரிமை, வேலைவாய்ப்பு, அரசியல் பிரதிநிதித்துவத்தை பெற்றுத் தந்ததோடு சமத்துவத்திற்காகவும் சமூக நீதிக்காகவும் தன் இறுதி மூச்சு வரை போராடிய திரு. #இரட்டைமலை_சீனிவாசன் அவர்களை எந்நாளும் நினைவில் கொள்வோம்." என்று குறிப்பிட்டுள்ளார்.