ஓய்வுபெற்ற அர்ச்சகர்கள், பூசாரிகளின் ஓய்வூதியம் அதிகரிப்பு... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

 
அர்ச்சகர்கள் ஓய்வூதியம் உயர்வு..

கோவில்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற பூசாரிகளின் ஓய்வூதிய உயர்வு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள், பூசாரிகளின் நலன் கருதி பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதன்படி அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத கிராம கோவில்களில் 20 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பூசாரிகளின் ஓய்வூதியம் ரூ. 3,000-ல் இருந்து  ரூ 4,000 ஆக உயர்த்தி நேற்று ஆணை வெளியிடப்பட்டது.

இந்து சமய அறநிலையத்துறை

இதேபோல் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற அர்ச்சகர்களின் ஓய்வூதியம் ரூ.1,000-ல் இருந்து ரூ. 3,000 ஆக உயர்த்தப்படும் என்றும் தமிழக அரசு நேற்று ஆணை பிறப்பித்திருந்தது. இந்நிலையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டங்களை தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில்  முதல்கட்டமாக 5 அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகளுக்கு  அவர் உயர்த்தப்பட்டுள்ள ஓய்வூதியத் தொகையினை வழங்கினார்.

ஸ்டாலின்

இதனைத்தொடந்து இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓதுவார்கள்,  இசைக்கலைஞர்கள், வேதபாராயணர்கள், அரையர்கள், திவ்வியபிரபந்தம் பாடுவோர் மற்றும் அர்ச்சகர்கள் என அனைத்து பிரிவினருக்கும்  ஓய்வூதிம்  ரூ.1,000 இலிருந்து ரூ.3,000 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.  இதேபோல் கிராமக் கோயில் பூசாரிகளுக்கு ஓய்வூதியம் ரூ.3,000/-த்தை ரூ.4,000/- ஆக உயர்த்தி வழங்கப்பட உள்ளது.