வாகனத்தில் ஸ்டிக்கர் ஒட்டுவதில் கட்டுப்பாடு - இன்று முதல் அமல்

 
tn

தனிநபர் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவது தொடர்பான கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

police

தனிநபர் வாகனங்களில் அரசால் அங்கீகரிக்காத அடையாள ஸ்டிக்கர்களை ஒட்டக்கூடாது; முதற்கட்டமாக காவல்துறை என ஸ்டிக்கர் ஒட்டி உள்ள வாகனங்களை நிறுத்தி சோதனையிட முடிவு (வாகன நம்பர் பிளேட்டில் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று  காவல்துறை விளக்கமளித்துள்ளது. 

traffic police chennai

அதேபோல் ஊடகத்தில் பணியாற்றுவோர் பெயரில் வாகனம் இருந்தால் அதில் ஸ்டிக்கர் ஒட்டி கொள்ளலாம். அரசு அங்கீகாரம் செய்த அந்த செய்தி நிறுவனத்தின் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். யூ டியூப்பர்ஸ் பிரஸ் ஸ்டிக்கர் பயன்படுத்த முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வேறு ஒருவர் பெயரில் இருந்து ஸ்டிக்கர் ஒட்டி இருந்தால் முதல் தடவை ₹500 ,இரண்டாவது முறை ₹1500 அபராதம்   விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.