சத்துணவு பணியாளர்களுக்கு ரூ.1000-ஆக பொறுப்பு படி உயர்வு
Jan 7, 2025, 15:26 IST1736243771922
எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் சத்துணவு அமைப்பளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கூடுதல் பொறுப்புப்படியினை 600 ரூபாயில் இருந்து 1000 ரூபாய் ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் புரட்சித் தஎைம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின்கீழ் பணிபுரியும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு ஒரு நாளுக்கு ரூ.20 வீதம். மாதத்திற்கு ரூ.500 ஆக வழங்கப்பட்டு வரும் கூடுதல் பொறுப்புப் படியினை ஒரு நாளுக்கு ரூ 33 வீதம் 1000 ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்த்தப்படும் கூடுதல் பொறுப்புப்படிக்காக ரூ.6.68 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.