பிரேமலதா விஜயகாந்துக்கு அதிகாரம் - மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்!!

 
premalatha vijayakanth

தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்


சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது; மக்களவை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து நிர்வாகிகளிடம் பிரேமலதா விஜயகாந்த் கருத்து கேட்டதாக தெரிகிறது. 

▪️ நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க பிரேமலதாவுக்கு அனைத்து அதிகாரங்களும் வழங்கி தீர்மானம்

premalatha

▪️ விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த அரசியல் தலைவர்களுக்கு, அஞ்சலி செலுத்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம்

▪️ விஜயகாந்துக்கு மாவட்டம் தோறும் சிலை நிறுவ மற்றும் விஜயகாந்த் நினைவிடத்தில் தினந்தோறும் அன்னதானம் உதவிகள் செய்ய அறக்கட்டளை உருவாக்கியதற்கு நன்றி தெரிவித்து தீர்மானம்

premalatha

▪️ தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு முன் விஜயகாந்த் புகழை எடுத்துரைக்கும் வகையில் ஊர்தோறும் கூட்டங்கள் நடத்த கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது