“பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும்”- பாமக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம்
பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டின் அளவை, அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப மேலும் 2 சதவீதம் உயர்த்த வேண்டுமென பாமக சித்திரை முழு நிலவு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
🔸 வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு 10.5 சதவீதத்தை உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
🔸 அனைத்து சமுதாயத்தினருக்கும் அவர்களது மக்கள் தொகைக்கு இணையாக இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
🔸 பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டை மக்கள் தொகைக்கு ஏற்ப 2 சதவீதம் உயர்த்த வேண்டும்.
🔸 ஒன்றிய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்த வேண்டும்.
🔸 கிரீமிலேயர் முறையை உடனடியாக நீக்க வேண்டும்.
🔸 தனியார் துறையில் இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும்.
🔸 அரசுத்துறையில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும்.
🔸 உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் பணிகளில் இட ஒதுக்கீட்டை கட்டாயமாக்க வேண்டும்.
🔸 பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கிட வழங்க வேண்டும்.
🔸சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்த இந்திய பிரதமர் மோடிக்கு இம்மாநாடு நன்றி தெரிவிக்கிறது.
🔸 ஜம்மு &காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட சகோதர, சகோதரிகளுக்கு வீர வணக்கம்: பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானுக்கு எதிராக எதிர்காலத்திலும் இந்தியாவின் இராணுவ நடவடிக்கைகளுக்கு முழு ஆதர


