பிரச்சாரத்தின் போது நெகிழ்ச்சி! குழந்தைக்கு ‘ஜெயலலிதா’ எனப் பெயர் சூட்டிய அதிமுக வேட்பாளர்..!
மேற்கு தாம்பரம் பகுதிகளில் வாகன பிரச்சாரத்தை மேற்கொண்ட அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக போட்டியிடும் சிட்லபாக்கம் ராஜேந்திரன் கடப்பேரி பண்ணாரி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார். அவருடன் முன்னாள் அமைச்சர் டி.கே.எம். சின்னையா, பாஜக மாவட்ட தலைவர் ரகுராமன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் கரிகாலன் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர், கூட்டணி கட்சித் தொண்டர்கள் புடை சூழ நடைபெற்ற வாகன பிரச்சாரத்தில் சிட்லபாக்கம் ராஜேந்திரனுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில், கடப்பேரி பகுதியைச் சேர்ந்த பாரத் – சந்தியா தம்பதியினருக்கு சமீபத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயரை சிட்லபாக்கம் ராஜேந்திரன் சூட்டினார். மேலும், குழந்தைக்கு அன்பு முத்தம் கொடுத்து வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.



