பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்துகிறது ரிசர்வ் வங்கி: முதற்கட்டமாக ரூ.10, ரூ.20 நோட்டுகள் அச்சடிப்பு!
Aug 6, 2026, 06:20 IST1785977440000
இந்தியாவில் ரூபாய் நோட்டு பயன்பாடு துவங்கிய காலத்தில் இருந்தே பேப்பரில் அச்சடிக்கபப்ட்ட தாள்களை தான் பயன்படுத்தி வருகிறோம்.
தற்போது முதல்முறையாக பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வர இருக்கின்றன. முதற்கட்டமாக 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் மதிப்புடைய பிளாஸ்டிக் நோட்டு பயன்பாட்டிற்கு வர இருக்கின்றன.
இந்நிலையில் அடுத்த நிதியாண்டான 2027-28ல், பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு அறிமுகமாகும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.சோதனை முயற்சியில் தற்போது இருக்கும் இத்திட்டத்தின் படி, 10 ரூபாய், 20 ரூபாய் மதிப்பில் தலா 100 கோடி நோட்டுகள் அச்சிட்டு புழக்கத்தில் விடப்படும் என ஆர்.பி.ஐ., கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்தார். அவர், அதன் பிறகும், காகித ரூபாய் நோட்டுகளை கைவிடும் திட்டமில்லை; அவை தொடரும்' என்றார் .

