உயர்சாதி ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு செல்லுமா? - இன்று தீர்ப்பு

 
su

உயர் சாதி ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு செல்லுமா? செல்லாதா? என்பது குறித்து இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்.

 உயர்சாதி ஏழைகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தினை கடந்த 2019 ஆம் ஆண்டில் கொண்டு வந்தது மத்திய அரசு.  103 வது அரசியல் சாசன திருத்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட இந்த சட்டம் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தின . 

 அரசியல் சாசன திருத்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட இந்த சட்டம் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தின.  இட ஒதுக்கீடு வரும்போது 50 சதவீதத்தை மீறக் கூடாது என்கிற விதியை மீறியது.  ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாய் வரை வருமான வரம்பு நிர்ணயிக்கப்பட்டது எப்படி .  அந்த அளவுகோலின் அடிப்படையில் 10 சதவிகித இட ஒதுக்கீடு தீர்மானிக்கப்பட்டது என்பது போன்ற அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்தன.

ss

   இதன் பின்னர் சமூக ரீதியிலும் கல்வி ரீதியிலும் பின்தங்கியவர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்கிற அரசியல் சாசன விதிகளை மீறி உயர் சாதி ஏழைகளுக்கான இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக திமுகவும் அதன் கூட்டணி கட்சியான விசிக  உள்ளிட்ட கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தன. 

 இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்பு திட்டமல்ல . அது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் திட்டம் என்று திமுக என்று திமுக எம்பி வில்சன் உச்சநீதிமன்றத்தில் வாதிட்டார்.   பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடு என்பது சமத்துவத்தை பின்பற்ற சொல்லும் அரசியல் சட்ட பிரிவு 14க்கு எதிரான அநீதி என்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் நோக்கத்தையே சிதைக்கிறது என்றும் திமுக வாதிட்டது.  
மத்திய  அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் இந்த சட்ட திருத்தம் முறையானது என்று வாதிட்டனர்.  இதன் பின்னர் செப்டம்பர் மாதத்தில் 7 நாட்கள் அரசியல் சாசன அமர்வில் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.   உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அரசியல் அமர்வு இன்று தீர்ப்பினை வழங்க இருக்கிறது.