சென்னையில் ஆய்வாளர்கள் அதிரடி இடமாற்றம்
Sep 30, 2026, 21:30 IST1790784058000
3 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து சென்னை காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
3 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து சென்னை காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆய்வாளர் எஸ்.அகிலா சென்னை அண்ணாநகரில் இருந்து அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆர்.மகேஸ்வரி கோயம்பேடு சட்டம்-ஒழுங்கு காவல் நிலையத்தில் இருந்து மயிலாப்பூர் AWPS-க்கும், ஜி.முருகேசன் தரமணி சட்டம்-ஒழுங்கு காவல் நிலையத்தில் இருந்து கோயம்பேடு காவல் நிலையத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

