காப்பாத்துங்க..காப்பாத்துங்க...அலறிய பெண்கள், குழந்தைகள்! வெள்ளத்தில் சிக்கிய 12 பேரை பத்திரமாக மீட்ட இந்திய விமானப்படை..!

 
1

சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தல்பூரில் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் சிக்கித் தவித்த 12 பேரை இந்திய விமானப்படை வீரர்கள் பத்திரமாக மீட்டனர். வெள்ளம் காரணமாக சாலை மற்றும் சுற்றுப்புற பகுதிகள் நீரில் மூழ்கியதால், அங்கு சிக்கியவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து ஹெலிகாப்டர் மூலம் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலம் ஒவ்வொருவராக மீட்கப்பட்ட 12 பேரும் பாதுகாப்பாக வெளியே கொண்டு வரப்பட்டனர். விமானப்படை வீரர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 


சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டத்தில் உள்ள டோங்காகாட் கிராமத்திற்கு அருகே இந்திராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அப்பகுதி வெள்ளத்தில் மூழ்கியது. கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 1,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு மாவட்டத்திலுள்ள நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.இதனிடையே, வெள்ளத்தில் ஒரு குடிசையில் சிக்கிய பெண்கள், குழந்தைகள் உள்பட 12 பேரை இந்திய விமானப்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

இதனிடையே, வெள்ளத்தில் ஒரு குடிசையில் சிக்கிய பெண்கள், குழந்தைகள் உள்பட 12 பேரை இந்திய விமானப்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.இதனிடையே, வெள்ளத்தில் ஒரு குடிசையில் சிக்கிய பெண்கள், குழந்தைகள் உள்பட 12 பேரை இந்திய விமானப்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.