கண்ணீர் மல்க கோரிக்கை..! மகன் குறித்து தகவல் கொடுத்தால் 1 கோடி சன்மானம்..!

 
1

 சட்லஜ் நதியில் விழுந்த காரில் இருந்து காணாமல் போன சைதை துரைசாமியின் மகன் வெற்றியை தேடும் பணி 3ஆவது நாளாக தொடர்கிறது. பனிப்பொழிவு காரணமாக தேடும் பணியில் சிக்கல் நிலவுகிறது.

இந்நிலையில் சட்லஜ் நதியில் மாயமான தனது மகன் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.1 கோடி சன்மானம் வழங்கப்படும் என சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி அறிவித்துள்ளார். ரூ.1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்ட தகவலை அருகில் உள்ள பழங்குடியின மக்களுக்கு தெரிவிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார். 

சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி தனது நண்பருடன் வெற்றி துரைசாமி இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் மலைப்பகுதியில் இருந்து கவிழ்ந்து சட்லஜ் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.இந்த கோர விபத்தில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் கோபிநாத் என்பவர் படுகாயங்களுடன் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது